Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 37:06:39
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • “வெள்ளை, முட்டாள்” என்பது நிறவெறியா?

    13/02/2025 Duración: 08min

    ஆஸ்திரேலிய கால்பந்து நட்சத்திரம் Sam Kerr, இலண்டனில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, ஒரு காவல்துறை அதிகாரியை "stupid and white" - "முட்டாள் வெள்ளையன்" என்று விவரித்ததாக அவர் மீது 2023ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்த விசாரணை நேற்று முன் தினம் நிறைவடைந்தது.

  • முதலீடு செய்தால் விசா என்கிறது NZ; நாங்களும் தருவோம் என்கிறது லிபரல்

    13/02/2025 Duración: 06min

    பணக்கார முதலீட்டாளர்களுக்கான "கோல்டன் டிக்கெட்" விசாவை புதிய நிபந்தனைகளுடன் நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் Coalition தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் "கோல்டன் டிக்கெட்" விசா மீண்டும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் என்று பெடரல் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton தெரிவித்துள்ளார் . இது குறித்து ஆங்கிலத்தில் Sara Tomevska, Ewa Staszewska மற்றும் Essam Al-Ghalib இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • இஸ்ரேலிய நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் காணொலி வெளியிட்ட இரு NSW செவிலியர்கள் மீது விசாரணை

    12/02/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை

  • உலக வானொலி தினத்தில் நாங்கள் தரும் செய்தி என்ன?

    12/02/2025 Duración: 15min

    இன்று (13 பெப்ரவரி) உலக வானொலி தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புகளும், பத்து வருடங்களுக்கும் மேலாக உலக வானொலி தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வையொட்டி, பக்க சார்பற்ற, நம்பகமான செய்திகள் மற்றும் கதைகளைத் தொடர்ந்து எடுத்து வருவோம் என்று, SBS தமிழ் வானொலி ஒலிபரப்பாளர்கள் மீண்டும் உறுதி பூண்கிறார்கள். கூடவே, "ஏன் வானொலி பணிக்கு வந்தேன்" என்று தங்கள் அனுபவங்களையும் பகிர்கின்றனர். இந்த பதிவு முதலில் 13 பெப்ரவரி 2022 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது. நிகழ்ச்சி தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.

  • World Radio Day Special: The resilience, innovation & digital transformation of radio

    12/02/2025 Duración: 10min

    On this special World Radio Day episode, RaySel from SBS Tamil speaks with Davide Schiappapietra, SBS Audio Head of Language Content, about the evolution of radio in the digital age. From the shift to on-demand audio and podcasting to SBS Audio’s role in informing diverse communities, Davide shares insights on how radio continues to adapt and thrive. He also reflects on his personal journey from Italy to SBS, connecting his experiences with the transformation of the industry. Tune in for a deep dive into the resilience and future of radio in an ever-changing media landscape.

  • குயின்ஸ்லாந்தின் 50-cent பொது போக்குவரத்து கட்டணத் திட்டம் நிரந்தரமாக்கப்பட்டது!

    12/02/2025 Duración: 02min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த ஏழு வயது சிறுவனின் சிறப்பு வல்லமை என்ன? அதை அறிந்த பெற்றோர் செய்தது என்ன?

    12/02/2025 Duración: 10min

    மெல்பன் நகரில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் ராஜன்பாபு குடும்பதினரின் இளைய மகன் நிக்‌ஷிந்த் ஒரு சிறப்பு வல்லமை கொண்டிருக்கிறார் என்பதை அவரது மூத்த சகோதரர் அடையாளம் காட்டினார். அது என்ன வல்லமை, அதனைக் கண்டறிந்தவுடன் நிக்‌ஷிந்த்தின் பெற்றோர் என்ன செய்தார்கள் என்று அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய எஃகு மீது 25% அமெரிக்கா வரி விதிப்பு - பொருளாதாரம் பாதிக்குமா?

    12/02/2025 Duración: 06min

    எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25 சதவீத வரி விதிக்கும் நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு இதிலிருந்து விதிவிலக்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் சனிக்கிழமை போர் - இஸ்ரேல்

    12/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை12/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் சர்ச்சையின் பின்னணி என்ன?

    12/02/2025 Duración: 09min

    தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுப்பப்பட்டு சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் விவகாரம் தற்போது அயோத்தி பாணியிலான சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த செய்தியின் பின்னணியை விரிவாக முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • Skills in Demand விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?

    11/02/2025 Duración: 11min

    Skills in Demand (SID) விசா என்ற தற்காலிக விசாவை ஆஸ்திரேலிய அரசு கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்திருந்தது. இது குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஓலை மொழி.... இணைய வழி

    11/02/2025 Duración: 14min

    சங்க இலக்கிய இலக்கண நூல்களில் முக்கியமான நூல்களை, எண்ம மயப்படுத்தல் அல்லது கணினி மயப்படுத்தல் என்ற திட்டத்திற்காக European Research Commission ஒரு கணிசமான தொகை பணத்தை 2014ஆம் ஆண்டில் ஒதுக்கியது. அந்தத் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் பேராசிரியர் விசயவேணுகோபால் அவர்கள் தனது பின்னணி பற்றியும் இந்தத் திட்டம் பற்றியும் குலசேகரம் சஞ்சயனுடன் அலசியிருந்தார்.

  • சில வங்கிகள் வட்டி வீதத்தை குறைக்க ஆரம்பித்துள்ளன - மற்ற வங்கிகளும் குறைக்குமா?

    11/02/2025 Duración: 01min

    ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னரே மற்றொரு பெரிய நிதி நிறுவனமான AMP தனது நிலையான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • 2025-ஆம் ஆண்டு உலகில் சிறந்த விமான சேவை எது தெரியுமா?

    10/02/2025 Duración: 02min

    ஆண்டுதோறும் Airlinerating.com உலகளவில் சிறந்த 25 சிறந்த விமான நிறுவனங்களை தெரிவு செய்து வழங்கும் விருதில் தென் கொரிய கொடி உள்ள Korean Air முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • 'ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பணக்கார முதலீட்டாளர்களுக்கான விசா அறிமுகம்' - Peter Dutton

    10/02/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( செவ்வாய்க்கிழமை 11/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு நேரம் எங்கு அதிகம் தெரியுமா?

    10/02/2025 Duración: 02min

    மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைத் தருகிறார் செல்வி.

  • How to access parental leave pay in Australia - ஆஸ்திரேலியாவில் parental leave கொடுப்பனவு பெறுவது எப்படி?

    10/02/2025 Duración: 10min

    In Australia, some parents can receive parental leave payments from the government and their employers. But not everybody is eligible. This article breaks down what’s available, who can claim, and how to access these benefits. - ஆஸ்திரேலியாவில், சில பெற்றோர்கள் அரசிடமிருந்தும், அவர்களின் முதலாளிகளிடமிருந்தும் பெற்றோர் விடுப்பு- parental leave கொடுப்பனவுகளைப் பெறலாம். ஆனால் அனைவரும் இதற்குத் தகுதியுடையவர்கள் அல்ல.இந்த விவரணத்தில், parental leave கொடுப்பனவுகள் என்னென்ன கிடைக்கின்றன, யார் தகுதியுடையவர்கள், அவற்றை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம்.

  • ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

    10/02/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் பல அழகிய கடற்கரைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவை எவை என்பது தெரியுமா? இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • புற்றுநோய் வந்தவர்களுக்கொரு புதிய பாலம்

    10/02/2025 Duración: 14min

    World Cancer Day – உலக புற்றுநோய் தினம், February நான்காம் நாள் அவதானிக்கப்பட்டது. புற்றுநோய் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், புற்றுநோயைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் செய்யப்படும் பணிகளைப் போற்றவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அவதானிக்கப் படுகிறது.

  • Starlink சேவை குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா?

    10/02/2025 Duración: 06min

    Starlink சேவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர், Elon Musk. உலகின் மிகப் பெரிய பணக்காரர். தற்போது, அமெரிக்க அதிபர் Donald Trump இன் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர். அவரது நிறுவனமான Starlink வழங்கும் இணைய சேவையை ஆஸ்திரேலியர்கள் நம்பியிருப்பது குறித்து சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

página 12 de 15