Sbs Tamil - Sbs
சிட்னியில் காணாமல் போன தமிழ்ப்பெண்- தந்தையின் உருக்கமான வேண்டுகோள்
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:13:34
- Mas informaciones
Informações:
Sinopsis
சிட்னி நகரின் புறநகர் Auburnனில் வசித்து வரும் 18 வயதான பல்கலைக்கழக மாணவி ஆனிஷா சாதிக் (Aanisha Sathik) அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23, 2025) மதியம் இரண்டு மணி போல் வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார், ஆனால் இன்று வரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டு பிடித்துக் கொடுக்குமாறும் அவரது தகப்பன் சாதிக் ஹபீப் விடுக்கும் உருக்கமான வேண்டுகோளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் Auburn காவல்துறையை அல்லது Crime Stoppers என்ற அமைப்பை 1800 333 000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனிஷா கடைசியாக கருப்பு ஹூட் ஜம்பர், பச்சை நிற கோடுகள் கொண்ட நீண்ட கருப்பு நிற காற்சட்டை, வெள்ளை நிற காலணிகள் மற்றும் தங்க காதணிகள் அணிந்திருந்தார் என்றும் அவர் இரயிலில் பயணம் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.