Cochrane Library: Podcasts ()

தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் டெலிரியத்தை தடுக்கும் சிகிச்சைகள்

Informações:

Sinopsis

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்- லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் மனக்குழப்ப நிலை, அதாவது டெலிரியம் உருவாகக் கூடும். இது மோசமான மருத்துவ விளைவுகள், மருத்துவமனையில் நீடித்த தங்கல்கள், மற்றும் அதிகரித்த ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுக்கு வழி வகுக்க கூடிய ஒரு கடுமையான மற்றும் துயரமான நோய் நிலையாகும். ஆதலால், இதனை தடுக்கும் திறன்மிக்க வழிகளை கண்டறிவது முக்கியமாகும். இதற்கான பலதரப்பட்ட சிகிச்சை தலையீடுகளை மார்ச் 2016-ல் மேம்படுத்தப்பட்ட ஒரு காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது. யுகே-விலுள்ள யார்க் பல்கலைக்கழகத்திலிருந்து நஜ்மா சித்திக் என்பவரால் வழி நடத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வின் முக்கிய முடிவுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.