Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Alice Springs: ‘பூர்வீக குடிமக்களோடு பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பாக்கியம்’
23/10/2025 Duración: 12minNorthern Territoryயின் முக்கிய நகரமான Alice Springs நகரில் நடைபெற்ற தீபாவளி திருவிழாவின்போது நாம் மருத்துவர் அலமேலு கணேசன் அவர்களை சந்தித்து உரையாடினோம். பூர்வீக குடிமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி : தாய்ப்பாலூட்டுவது மார்பக புற்றுநோயை தடுக்குமா?
23/10/2025 Duración: 06minகர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டல் காலத்தில் பெண்களின் மார்பக திசுக்களில் சிறப்பு வகை நோய் எதிர்ப்பு செல்கள் பெருகி, அங்கே நீண்டகாலம் தங்கி இருக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2025 வியாழக்கிழமை
23/10/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 23/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்
22/10/2025 Duración: 02minபல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் எந்த இடங்களில் உள்ளன என்ற செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியின் மிகவும் தூய்மையான 10 கடற்கரைகள் எவை?
22/10/2025 Duración: 02minசிட்னி நகரின் மிகத் தூய்மையான கடற்கரைகள் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வீட்டு கடனில் வட்டி சுமையை குறைக்கும் ரகசியம் – Offset account விளக்கம்!
22/10/2025 Duración: 13minவீட்டு கடன் பெறும்போது அதனை வங்கியில் பல வகையான கணக்குகளில் பராமரிக்கலாம். அதில் ஒரு வகையான Mortgage offset account வகை குறித்து விரிவாக விளக்குகிறார் கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு நிதி துறையில் வழிகாட்டி வரும் Hardee Mortgage Solutions எனும் நிறுவனத்தைச் சார்ந்த Mortgage ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இலங்கை: நிலவிடுவிப்பும் மீள்குடியேற்றமும்
22/10/2025 Duración: 07minயுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நில விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2025 புதன்கிழமை
22/10/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
தீபாவளின்னா எங்களுக்கு இதுதான்!
21/10/2025 Duración: 13minஆஸ்திரேலியாவில் தீபாவளி திருநாள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறைக்கு தீபாவளி தரும் அர்த்தம் என்ன? இந்த கேள்வியோடு சில இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார் ஜனனி.
-
செய்தியின் பின்னணி: அதிபர் Trump-பிரதமர் Albanese சந்திப்பு எதை சாதித்தது?
21/10/2025 Duración: 08minஅமெரிக்க அதிபர் Donald Trump க்கும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseக்கும் இடையே அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன பேசப்பட்டது, எதை சாதித்தது என்ற விவரணத்தை செய்தியின் பின்னணி நிகழ்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
-
Louvre அருங்காட்சியகத்திலிருந்து பிரெஞ்சு அரச நகைகள் திருடப்பட்டது எப்படி?
21/10/2025 Duración: 03minபாரிஸின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பிரெஞ்சு அரச நகைகள் மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று அந்நாட்டுச் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கொள்ளை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை
21/10/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
Springtime hay fever and asthma: how to manage seasonal allergies - வசந்தகால ஒவ்வாமைகளால் அவதிப்படுகிறீர்களா?
20/10/2025 Duración: 11minSpringtime in Australia brings warmth, blossoms, and longer days—but also the peak of pollen season. For millions of Australians, this means the onset of hay fever and allergy-induced asthma. - வசந்த காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மகரந்தங்களால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தனது மாமாவை 'ஆணவக்கொலை' செய்த பிரிஸ்பன் நபருக்கு ஆயுள் தண்டனை
20/10/2025 Duración: 03minகுடும்ப உறவு தொடர்பான தவறான புரிதல் மற்றும் மத நம்பிக்கை காரணமாக தனது மாமாவை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரிஸ்பன் நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தீபாவளிக்கு என்ன சாப்பிடுவோம்? அங்கு அப்படி, இங்கு இப்படி!
20/10/2025 Duración: 14minதீபாவளி விழாவின் மிக முக்கிய அம்சம் உணவு. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீபாவளி திருவிழாவின்போது பல சமூகங்கள் அசைவ உணவு உண்பது அவர்களின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக உள்ளது. இந்த பின்னணியில், ஆஸ்திரேலியாவில் வாழும் ஐந்து தமிழர்கள் தாங்கள் பிறந்த ஊர்களில் எப்படி தீவாளியைக் கொண்டாடினோம், இங்கு எப்படிக் கொண்டாடுகிறோம் எனும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அனுபவப் பகிர்வு: பிரியா (சிட்னி), உமா (பிரிஸ்பேன்), சுரேஷ் (மெல்பன்), பிரமிளா (சிட்னி) & சிவா (பிரிஸ்பேன்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: மாயமாகும் வங்கி கிளைகளும், ATMகளும்! இனி பணம் எடுப்பது சவாலாகுமா?
20/10/2025 Duración: 07minநாட்டில் வங்கி கிளைகள், ATMகள் குறைவது குறிப்பாக கிராம்புற மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் பணத்தை ஏற்க வேண்டும் என்பதற்கான அரசின் சட்டத்திருத்த விதிமுறைகளின் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 20 அக்டோபர் 2025 - திங்கட்கிழமை
20/10/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
19/10/2025 Duración: 08minஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் திடீர் ராஜினாமா - புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா?; நீதிமன்றத்தை அவமதித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 அக்டோபர் – 18 அக்டோபர் 2025)
17/10/2025 Duración: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 அக்டோபர் – 18 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 18 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி.
-
ஆஸ்திரேலியாவில் கட்டாய திருமணம் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு!
17/10/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் ஆட்கடத்தல், கட்டாய திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்த முறைப்பாடுகள் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.