Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:14:02
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்

    13/12/2024 Duración: 02min

    சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியான் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்தவார முக்கிய நிகழ்வுகள்

    13/12/2024 Duración: 08min

    இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவரின் இந்திய பயணத்தின் போது மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என மீனவர் அமைப்புகள் கோரிக்கை; சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்; தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அரசியல் முக்கியஸ்தர்கள் கருத்து இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • மிகவும் சூடான கோடையை எதிர்பார்க்கிறீர்களா? என்ன நடக்கும்?

    13/12/2024 Duración: 06min

    கோடை காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • சமூக வலைதளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும்

    13/12/2024 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை

  • 50 years of multicultural broadcasting: Celebrating SBS Audio's legacy and future - SBS: ஐம்பது ஆண்டு பயணத்தில் அடுத்த ஆண்டு மைல் கல்!

    12/12/2024 Duración: 07min

    SBS Audio will celebrate its 50th anniversary in 2025, marking a significant milestone in its history. As part of this occasion, the National Film & Sound Archive’s Sounds of Australia has included SBS's language broadcasts in its collection, highlighting their cultural and historical significance. - SBS ஆடியோ 2025 ஆம் ஆண்டில் தனது 50 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக, National Film & Sound Archive’s Sounds of Australia, SBS இன் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் விதமாக SBS இன் மொழி ஒலிபரப்புகளை அதன் சேகரத்தில் இணைத்துள்ளது.

  • பெண் கவிஞர்களின் படைப்புகள் சுயபுலம்பல்களா? -பதிலளிக்கிறார் அவ்வை

    12/12/2024 Duración: 19min

    ஈழத்தமிழ் எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான கவிஞர் அவ்வை விக்னேஸ்வரன் அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரது எழுத்துப் பயணம் உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Interview with Mr Selvendra in Perth – Part 2 - “ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது”

    12/12/2024 Duración: 12min

    Mr.Raj Selvendra, a distinguished founder of the Tamil Sangam in Perth, Australia, Managing Director of Park Medical Group—one of Perth's largest medical service providers—and a prominent figure in the Australian Labor Party, joins us for an insightful conversation. The interview took place at his office and was conducted by RaySel, with assistance from Annamalai Mahizhnan and Dilpreet Taggar (SBS Spice). Interview Part - 2 (Final) - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தமிழ் சங்கத்தை நிறுவியவர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவரும், பெர்த் நகரில் இயங்கும் மிகப் பெரிய மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்க் மெடிகல் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆஸ்திரேலிய லேபர் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான ராஜ் செல்வேந்திரா அவர்கள் நம்முடன் கலந்துரையாடுகிறார். அவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். நேர்முக உதவி: அண்ணாமலை மகிழ்நன் & டில்ப்ரிட் றக்கார் (SBS Spice). நேர்முகம் - பாகம் - 2 (நிறைவுப் பாகம்)

  • Interview with Mr Selvendra in Perth – Part 1 - “நான் மலேசியாவிலேயே இருந்திருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லை”

    12/12/2024 Duración: 12min

    Mr.Raj Selvendra, a distinguished founder of the Tamil Sangam in Perth, Australia, Managing Director of Park Medical Group—one of Perth's largest medical service providers—and a prominent figure in the Australian Labor Party, joins us for an insightful conversation. The interview took place at his office and was conducted by RaySel, with assistance from Annamalai Mahizhnan and Dilpreet Taggar (SBS Spice). Interview - Part 1 - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தமிழ் சங்கத்தை நிறுவியவர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவரும், பெர்த் நகரில் இயங்கும் மிகப் பெரிய மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்க் மெடிகல் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், ஆஸ்திரேலிய லேபர் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான ராஜ் செல்வேந்திரா அவர்கள் நம்முடன் கலந்துரையாடுகிறார். அவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். நேர்முக உதவி: அண்ணாமலை மகிழ்நன் & டில்ப்ரிட் றக்கார் (SBS Spice). நேர்முகம் - பாகம் - 1

  • ஜனவரி 1 முதல் நாட்டில் வரவிருக்கும் மாற்றங்கள் என்ன?

    12/12/2024 Duración: 08min

    ஜனவரி முதல் தேதி Centrelink, Medicare உள்ளிட்ட பல திட்டங்களில் மாற்றங்கள் வரவுள்ளன. அவை என்னவென்று விளக்குகிறது “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. முன்வைப்பவர்: றைசெல்.

  • இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் கூகுளில் எதைப்பற்றி அதிகம் தேடியுள்ளனர்?

    12/12/2024 Duración: 02min

    விளையாட்டு நிகழ்வுகள்,பாப் நட்சத்திரங்கள், முக்கிய செய்திகள் மற்றும் புதிர் தீர்வுகள் என google இல் இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் எதையெல்லாம் தேடியிருக்கிறார்கள் என்ற பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பிறருக்கு நாம் தரும் பரிசுகள் எங்குபோய் சேர்கின்றன?

    12/12/2024 Duración: 06min

    கிறிஸ்மஸ், புத்தாண்டு என்று விழாக்காலங்களில் பிறர் தருகின்ற தேவையற்ற பரிசுகளின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்றும், அந்த பரிசுபொருட்களை யாரும் பயன்படுத்தாமல் கடைசியில் அவை குப்பையாக கழிவுகளாக முடிவடையும் என்றும் ஆஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. விவரணத்தின் ஆங்கில மூலம் SBS-Newsக்காக Greg Dyett. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • ஐநா சபையில் காசா போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா வாக்களித்தது

    12/12/2024 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 12 டிசம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக விசா அறிமுகம்!

    11/12/2024 Duración: 02min

    Skills in Demand (SID) விசா என்ற புதிய தற்காலிக விசாவை ஆஸ்திரேலியா அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஏன் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்?

    11/12/2024 Duración: 09min

    தமிழ்நாட்டில் மதுரையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • மெல்பன் யூத வழிபாட்டுத்தலம் மீதான "பயங்கரவாத" தாக்குதல்- பிந்திய தகவல்கள்

    11/12/2024 Duración: 06min

    மெல்பனிலுள்ள யூத வழிபாட்டுத் தலம் மீது வேண்டுமென்றே தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து ஆஸ்திரேலிய அரசு ஒரு சிறப்பு பணிக்குழுவை -specialist taskforceஐ நிறுவுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அரிதிலும் அரிதான தமிழர் கக்கன்

    11/12/2024 Duración: 06min

    அனைவரும் பின்பற்றவேண்டிய உதாரண மனிதனாக வாழ்ந்து காட்டிய தமிழர் பி. கக்கன் அவர்கள். ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்தவரும், விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் அவர்கள் நாம் தலை வணங்கி போற்றுதலுக்குரியவர். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.

  • 'வெறுப்புக்கு இடமில்லை': சிட்னியில் ஒரே இரவில் இஸ்ரேலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிக்கு கண்டனம்

    11/12/2024 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 11 டிசம்பர் 2024 புதன்கிழமை

  • விடுமுறைகால நூதன ஆன்லைன் மோசடிகள்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    10/12/2024 Duración: 14min

    கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என்று விழாக்கள் வரிசைகட்டி வருகின்றன. இந்த நீண்ட விடுமுறை காலத்தில் ஷாப்பிங் செய்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்றும், எந்த வகையான ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன என்றும் விளக்குகிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருகின்றவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இணைய பாதுகாப்பு குறித்த தொடரின் மூன்றாம் பாகம்.

  • குயின்ஸ்லாந்து ஆய்வகத்திலிருந்து காணாமல்போயுள்ள கொடிய வைரஸ் மாதிரிகள்!

    10/12/2024 Duración: 02min

    குயின்ஸ்லாந்து அரசு நடத்தும் ஆய்வகத்தில் biosecurity பாதுகாப்பு வளையத்தில் இருந்த கொடிய Hendra வைரஸின் கிட்டத்தட்ட 100 உயிருள்ள மாதிரிகள் உட்பட 323 வைரஸ் மாதிரிகள் காணாமல் போயுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நாட்டின் வட்டிவீதம் குறையுமா? அதிகரிக்குமா? அறிவிக்கத் தயாராகிறது ரிசர்வ் வங்கி

    10/12/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

página 3 de 25