Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 164:16:13
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இலங்கை வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

    02/12/2025 Duración: 03min

    இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய Ditwah புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 2025 உலகில் அழகான பயணிகள் நிலைய பட்டியலில் சிட்னி Gadigal Metro

    02/12/2025 Duración: 03min

    சிட்னியில் புதிய மெட்ரோ நிலையமான Gadigal Metro Station, 2025 ஆம் ஆண்டின் உலகின் அழகான பயணிகள் நிலையங்கள் பட்டியலில் Prix Versailles மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 02 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    02/12/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 2/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • முதியவர்களுக்கு சாலை பாதுகாப்பை கற்றுக்கொடுக்கும் திட்டம்!

    01/12/2025 Duración: 08min

    Ethnic Communities Council of NSW (ECCNSW) முன்னெடுத்துள்ள சமூக சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்குகிறார் ECCNSW-இல் தமிழ் இருமொழி ஆசிரியராக கடமையாற்றும் மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • நியூசிலாந்தை விட்டு பலர் வெளியேறுவதற்கான காரணம் என்ன?

    01/12/2025 Duración: 03min

    2025 செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் 73,000க்கும் மேற்பட்ட நியூசிலாந்து குடிமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

  • செய்தியின் பின்னணி : A320 விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு - பின்னணியும் பாதிப்பும்

    01/12/2025 Duración: 06min

    Airbus A320 விமானங்களில் அவசர மென்பொருள் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உலகளவில் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 01 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை

    01/12/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    30/11/2025 Duración: 09min

    இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள்; அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • தோல் புற்றுநோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது?

    30/11/2025 Duración: 12min

    தோல் புற்றுநோய் குறித்து நம்மிடையே நிலவும் தவறான புரிதல்கள் குறித்தும், தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

  • ஐந்து புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கிய மெல்பன் மெட்ரோ சுரங்கப்பாதை திறக்கப்பட்டது!

    30/11/2025 Duración: 02min

    மெல்பனின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட metro tunnel- சுரங்கத்திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Physiotherapist: ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது?

    30/11/2025 Duración: 13min

    ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். அந்தவகையில் Physiotherapy தொடர்பில் அறிந்துகொள்வோம். Physiotherapy சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த physiotherapist பிரியா ஞானகுமாரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? பின்னணி என்ன?

    29/11/2025 Duración: 09min

    அமெரிக்கா, வெனிசுவேலா மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணி தொடர்பிலும் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese!

    29/11/2025 Duración: 02min

    ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் அவரது இணையான Jodie Haydonனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (23 – 29 நவம்பர் 2025)

    28/11/2025 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (23 – 29 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

  • டாஸ்மேனியாவில் நீரில் தள்ளப்பட்டு உயிரிழந்த இந்தியர்: குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு!

    28/11/2025 Duración: 03min

    டாஸ்மேனியாவில் Deepinderjeet Singh என்ற 27 வயது இளைஞர் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • MiniPod: Take it easy | Words we use - MiniPod: Take it easy | Words we use

    28/11/2025 Duración: 03min

    Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'take it easy'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'take it easy' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

  • இன்றைய செய்திகள்: 28 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை

    28/11/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • செய்தியின் பின்னணி: Black Friday விற்பனைகளில் பரவும் Ghost Store மோசடிகள்!

    28/11/2025 Duración: 07min

    எச்சரிக்கை - Black Friday விற்பனை பரபரப்புக்கிடையில், புதிய வகை இணையவழி மோசடி ஒன்று பெருமளவில் பரவி வருகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    27/11/2025 Duración: 09min

    மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்களத்தின்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு. அமைதியாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பலபகுதிகளில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றைமுன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர்மதிவாணன்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    27/11/2025 Duración: 07min

    ரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நிலை; அமெரிக்கா- வெனிசுலா மோதல் போக்கு: பல நாடுகளின் முக்கிய விமானங்களுக்கு தடை; அமெரிக்காவில் தேசித காவல்படையினர் மீது ஆப்கானியரின் தாக்குதல்; மேற்குக்கரையை குறிவைத்துள்ள இஸ்ரேலிய படைகள்; வங்கதேச குடிசைப்பகுதிகளில் தீ விபத்து; ஹாங்காங்கில் அடுக்குமாடிகள் தீ விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

página 1 de 65